Friday, January 16, 2009

ஏழை படும் பாடு-அற்புதமான காதல் நாவல்

ஏழை படும் பாடு-விக்டர் ஹியூகோ
தமிழில்-கவியோகி சுத்தானந்த பாரதி

சுமார் 400 பக்கம் கொண்டது இந்த புத்தகம்.தற்போது இந்த புத்தகம் புதியதாக வருகிறதா எனத் தெரியவில்லை.
பிரஞ்சுப் புரட்சியை மையமாகக் கொண்டு பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டது.தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டது.
பிரஞ்சுப்புரட்சியில் தனது மகளைக் கண்டுபிடித்து வளர்க்கும் ஒரு அப்பாவின் கதை.அந்த மகளின் காதல் கதை.
அன்பு,காதல்,பரிதாபம் இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாவல்.1986 ஆம் ஆண்டு ஒரே மூச்சில் நான் படித்து முடித்த முதல் புத்தகம்.அப்போது எனக்கு வயது 12. எட்டாம் வகுப்பு படித்தேன்.இன்றும் என்னை பிரமிக்கச் செய்யும் புத்தகம் இது.
இதன் பிரஞ்சுப் பெயர்-லே மிசரபிள்
பதிப்பகம்- தமிழில் ஞாபகமில்லை.
விலை-தெரியாது.

No comments:

Post a Comment