Thursday, February 19, 2009

நான் ஏன் புத்தகம் படிக்கும்படி எழுதுகிறேன்?


ஏன் நான் ஜீனியஸ் தமிழ்புத்தகங்கள் என்ற வலைப்பூ எழுதுகிறேன்?

1970 களில் பெட்ரோல் உலகத்தின் தலையெழுத்தை மாற்றியது.
1980 களில் அந்த இடத்தை ப்ளாஸ்டிக் பிடித்தது.
1990 களில் அணுகுண்டு அரசியல் உலக வரலாற்றில் முக்கிய இடத்திற்கு வந்தது.
1995 ஜனவரி 1 முதல் உலக வர்த்தக அமைப்பு உலகின் தலையெழுத்தை மாற்றி யெழுதியது.
2000 முதல் 2100 வரை தகவல் நமது ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் மாற்றும்.
இன்று தகவல்களே ஆயுதங்கள்!
நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறை பற்றி 25% தெரிந்தாலே அந்தத்துறையில் உங்கள் ஆதிக்கம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
அதே சமயத்தில் ஏராளமான ஞாபகசக்தி இருந்தால் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு எப்போதும் தற்கொலை எண்ணம் வராது என்பதை நவீன மனோதத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.நமது இந்து முன்னோர்கள் தினமும் கந்த சஷ்டிகவசம்,திருப்பாவை,திருவெம்பாவை,திருக்குறள்,பெரியபுராணம் என ஏராளமான புராண-இதிகாச புத்தகங்களை மனப்பாடம் செய்திருப்பது இந்த விஞ்ஞான ரகசியத்தின் அடிப்படையில் தான்.
எனவே கணிப்பொறியும் இணைய வசதியும் வீட்டுக்குள் உலகத்தையே கொண்டுவந்தாலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்டியம் 4 கணினி அளவிற்காவது பொது அறிவு, வாழ்வியல் தத்துவங்கள்,மனதத்துவம் அறிந்து கொள்வது நன்று.இந்த வலைப்பூ துவங்கியது முதல் நான் இதை ஒரு இண்டர்நெட் மையத்திலிருந்து தான் தினமும் ஒரு மணிநேரம் எழுதிவருகிறேன்.என் வயது 2009 அன்று 33 நிறைவடைகிறது.எனது மாத வருமானத்தில் 30% வலைப்பூவை வளர்க்கவே செல்கிறது.
நமது ஆதர்ஷ ஜனாதிபதி உயர்திரு.அப்துல்கலாம் அவர்களை நான் இரண்டாம் விவேகானந்தராகவே கருதுகிறேன்.இந்த தேசத்தில்(இந்தியாவில்) பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஜீனியஸ் ஆகவேண்டும்.அவர்களது குழந்தைகளும் ஜீனியஸ் ஆக வேண்டும்.நமது நாட்டைப்பார்த்து சீனா ,அமெரிக்கா அஞ்சவேண்டும்.எப்பேர்பட்ட நயவஞ்சகத்தாலும் நாமும்,நமது குடும்பமும்,நமது மாநிலமும்,நமது தமிழ்ரத்தங்களும்,நமது இந்துயாவும் சிறிதும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நான் இந்த வலைப்பூவை எழுதுகிறேன்.
நான் ஒரு பி.ஏ.பட்டதாரி..இதைப்படிக்கும் எனது தமிழ் ரத்தங்களே!
நமது இந்துயா ஒரு ஜீனியஸ் வல்லரசாக நீங்கள் செய்ய வேண்டியது-உங்கள் தினசரி வேலைகளை நேர்த்தியாகச் செய்யுங்கள்.நிறைய புத்தகங்கள் படியுங்கள்.அது போதும்.ஜெய் ஹிந்த்!!!!!!!!!!


Monday, January 26, 2009

புதுமணத்தம்பதிகளுக்கு பரிசளிக்க சிறந்தபுத்தகம்;ரொமான்ஸ் ரகசியங்கள்


ரொமான்ஸ் ரகசியங்கள்:புதுமணத்தம்பதிகள் தமக்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

இது ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
விலை:ரூ.100/-
புதுக்கணவன் தனது உள்ளாடைகளை சுத்தமாக வைத்திருப்பதில்லை.இந்த ஒரு காரணமே அந்த புது மணத்தம்பதிகள் டைவர்ஸ் ஆகக் காரணமாகிவிட்டது.
உங்களால் இதை நம்ப முடிகிறதா?ஆனால் இது உண்மை.
கணவன் மனைவிக்குள் எப்படி நடந்து கொண்டால் ஒருநாளும் பிரிவு வராது என்பதை மனோதத்துவ ரீதியில் கணவனுக்கும் மனைவிக்கும் சொல்லும் காம குரு இந்த புத்தகம்.
திருமணங்களில் நான் இந்த புத்தகத்தைத் தான் அன்பளிப்பாக வழங்குகின்றேன்.
இதில் உள்ள சுமார் 70 ஐடியாக்களில் சிலவற்றை பின்பற்றினாலே உங்கள் வாழ்க்கைத்துணையை சந்தோஷப்படுத்த முடியும்.
புத்தகம்
www.vikatan.com முகவரியிலும் எல்லா தமிழ் புத்தகக் கடை மற்றும் புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கிறது.இந்தியாவின் ஆதாரம் குடும்பம் என்ற அமைப்பே!அந்த குடும்ப அமைப்பு வலுப்பட வழிகாட்டி இந்த ரொமான்ஸ் ரகசியங்கள்.ஆக இந்த புத்தகத்திற்குத்தான் நோபல்பரிசு வழங்க வேண்டும்.
இந்த புத்தகத்தை 10 முறை படியுங்கள்.நீங்களும் இதை ஏற்றுக்கொள்வீர்கள்.

தியானம் கற்க-தச தீட்சை


தியானம் கற்க ஒரு புத்தகம்:தச தீட்சை(சத்தியமான ரகசியங்கள்)
எழுதியவர்:பாட்டு சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி,சீர்காழி.
விலை:ரூ.90/-
கிடைக்குமிடம்:ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன்சேவா அன்னதான அறக்கட்டளை,27,தியாகராஜ நகர்,
சீர்காழி-609110. செல் எண்கள்:9360780437,9976843908.
ஸ்ரீஇராமபிரானின் முன்னோர்கள் 8 தலைமுறையாக துர்கா வழிபாடு செய்துவந்ததால்தான் அந்த பரந்தாமன் 9 ஆம் தலைமுறையில் சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தார்.
கலிகாலத்தில் அம்மன் வழிபாடு மட்டுமே நிம்மதியுடன் கூடிய செல்வ வளம் தரும்.அதிலும் அம்மன் என்பதை இங்கு விளக்க விரும்புகிறேன்.
மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்!
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்!!
பஞ்சபூதங்களை இயக்குவது பிரம்மா-விஷ்ணு-சிவன் முதலான மும்மூர்த்திகள்!!
மும்மூர்த்திகள் என்பதும் பதவியே!!
மும்மூர்த்திகளை இயக்குவது ஆதிபராசக்தி எனப்படும் ஆதிபரபிரம்மசக்தி!!!
ஆதிபரபிரம்மசக்தியின் சிறுமி வடிவமே வாலை ஆகும்.
அவளை சிறுமியாக வழிபடும் முறைக்கு வாலை பூஜை என்று பெயர்.அந்த வாலை பூஜையை எப்படி செய்வது என்பதை விளக்குவதே இந்த புத்தகம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு மனிதன் சொல்லிக்கொடுத்து இன்னொரு மனிதன் நேரில் கற்றால் மட்டுமே புரியும் கலைகள் ஆறு ஆகும்.சுயமாக முயன்றால் தோல்வி அல்லது மரணம் அல்லது அவமானம் உண்டாகும்.
அவை தியானம்,சக்திபூஜை,ஜோதிடம்,மாந்திரீகம்,ஓவியம்,மொழி கற்பது(அது சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி,ஸ்போக்கன் இங்கிலீஷாக இருந்தாலும் சரி).
இனி புத்தகத்திலிருந்து..
அமாவசை தினத்தில் வாலைபூஜையை தொடங்கவேண்டும்.
பராசக்தியை வாலைதெய்வம் என உண்ர்ந்து இயம நியமங்களுடன் தினசரி ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடம்)வணங்கி வர வேண்டும்.ஒரு பலகை ஆசனத்தில் அமர்ந்து நம் இரு காதுகளையும் பஞ்சால் அடைத்துக்கொண்டு கண்களை மூடி “ஓம்” என்று எவ்வளவு சத்தமாக வாய்மூடி சொல்ல முடியுமோ அவ்வளவு நீண்ட நேரம் உள்ளுக்குள்ளேயே உச்சரித்து வரவேண்டும்.
இம்மாதிரி 108 முறை செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு தினமும்,இரண்டு வருடம் வரை செய்து வந்தால் வாலையின் அருள் கிடைக்கும்.
ஓம் என்ற அட்சரம் தானுண்டு,அதற்குள்
ஊமையெழுத்தும் இருக்குதடி நாமிந்த
எழுத்தை அறிந்து கொண்டோம்,
வினை நாடி விளையாடி கும்மியடி வாலைப் பெண்ணே
-கொங்கண சித்தர்

Thursday, January 22, 2009

முதலிடம் பிடிக்க ஒரு கீதை-சூப்பர் தமிழ் புத்தகம்
நீங்களும் முதல்வராகலாம்-தமிழில் ரா.கி.ரங்கராஜன்
ஆங்கில மூலம்:48 Laws of Power by Robert Green and Juest Elfarse.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள் அல்லது ஒரு நிறுவனமே நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அந்த வேலை அல்லது துறையில் முதலிடம் பிடிப்பது எப்படி?
பிடித்த பிறகு முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதை கடந்த 3000 ஆண்டு வரலாறுகளை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியுள்ளனர்.
இன்றைய உலகில் ரேஷன் கடை முதல் இலவசம் வாங்கச் சென்றாலும்.. சுடுகாட்டில் கூட கூட்டம்தான்.குறைந்த காலத்தில் நமது வேலையை முடித்துவிடுவது என்ற வித்தை சிலருக்கே தெரிந்துள்ளது.இதே நிலைதான் நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்..இந்த சூழலில் நாம் நமது வேலை அல்லது துறையில் ஜெயிக்க சில தில்லாலங்கடி வேலை பார்க்க வேண்டியுள்ளது.அதை எப்படி பார்ப்பது என்பதை உதாரணக்கதைகள் மற்றும் சம்பவங்களுடன் விளக்குகிறது.
நான் இந்த புத்தகத்தை இது வரை(22-01-2009) 100 முறை படித்திருப்பேன்.இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.எனது வாழ்க்கையில் சுவாரசியமும் வெற்றிகளும் குவிந்துகொண்டே செல்கிறது.
இந்த புத்தகத்தில் உள்ள டெக்னிக்குகள் தான் கடகராசியில் பிறந்தவர்களுக்கும்,கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிறவி சுபாவமாகவே அமைந்துள்ளது.மற்றராசிக்காரர்களுக்கு இந்த புத்தகமே ஒரு வாழ்க்கை கீதையாக உள்ளது.
இந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்:--

· நீங்கள் முதலிடம் பிடிக்க விரும்பினால்,உள்ளுக்குள் என்ன திட்டம் வைத்திருந்தாலூம், அதை எந்த உயிர் நண்பனிடமும் சொல்லாதீர்.
· அந்த திட்டத்திற்கு பிறரது உழைப்பு,திறமை,அறிவு,அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இதனால் 2 நன்மை உண்டு.ஒன்று உங்களுடைய அரிய நேரமும் உழைப்பும் மிச்சமாகும்.இரண்டு உங்களது வேகத்தையும்,திறமையையும் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
· எதிரியை வீழ்த்துவதில் முதல் இலக்கு-எதிரியை திசைதிருப்புவதே!
· நீங்களாக பிறரது கோபத்திற்கு ரியாக்ஷன் காட்டாதீர்கள்.
· நண்பன் போல நடியுங்கள்.ஆனால் ஒற்றனாக இருங்கள்.
· வெளியீடு;நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,105,ஜானி ஜான்கான் சாலை,சென்னை-14.விலை ரூ.100/- வெளிநாட்டு வாசகர்களுக்கு $5/-
· இதில் சில ஈவு இரக்கமற்ற நடைமுறைகள் கூறப்பட்டுள்ளன.அவற்றை நாம் பின்பற்றாவிட்டால் எதிரி நம்மை கபளீகரம் செய்துவிடுவான்.

பணம் சம்பாதிக்கப் பல வழிகள்-எப்படி கோடிரூபாய்கள் சம்பாதிப்பது? இதோ வழிமுறை!!!


பணம் சம்பாதிக்க பல வழிகள்
எழுதியுள்ளவர்:வாழ்வியல் நிபுணர்:பி.எஸ்.பி. எம்.ஏ.,

பல வருடங்களாக நான் தேடியது இந்த புத்தகத்தைத் தான்.எல்லோரும் வேலைக்குப் போகிறோம்.நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறோம்.நமது இந்து தர்மம் அதை பாவம் என்று கூறுகிறது.அது பொய்.நியாயமாக மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தாலும் தப்பில்லை.அவ்வளவு பணத்தை எப்படி நியாயமாக சம்பாதிப்பது?
இந்தத் தேடல்தான் எனக்கு 1992 லிருந்தே இருந்தது.இதற்கான விடை இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
திரும்ப திரும்ப படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.இதில் உள்ளக் கருத்துக்களை ஜீரணிக்கவேண்டும்.அப்போது தான் நாம் கோடீஸ்வரர் ஆக முடியும்.இதன் ஆசிரியர் தனது சொந்த மற்றும் கேட்டறிந்த அனுபவங்களையே இந்த புத்தகமாக தொகுத்துள்ளார்.
இந்த புத்தகம் மட்டும் தமிழ்நாட்டில் எந்த புத்தகக்கடையிலும் கிடைக்கவில்லை.கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மட்டுமே கிடைக்கிறது.இதேதலைப்பில் இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளதாம்.
சில கருத்துகள் இந்த புத்தகத்திலிருந்து:-
$ ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திங்கட்கிழமையன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு செல்லுங்கள்.திங்கட்கிழமையே வெங்கடாஜலபதியைத் தரிசியுங்கள்.இப்படி ஒருவருடம் வரை செய்ய வேண்டும்.மாதம் தவறாமல் செய்தால் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.இந்த வழிபாட்டால் மட்டும் நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக சம்பாதித்துள்ள சிங்கப்பூர் நபரை நான் அறிவேன்.
$பிரமீடுக்குள் எந்தப் பொருளை வைத்தாலும் அதை பல மடங்கு பெருக்கும் திறன் அதற்கு உண்டு.பிரமீடுக்குள் ரூ.100 அல்லது ரூ500 அல்லது ரூ1000 ஐ வையுங்கள்.
பல மடங்கு பெருகும்.
$ அமிதிஸ்டு என்ற ரத்தினத்தை(விலை ஒரு காரட் ரூ100 ஐ விட குறைவு) பணப்பெட்டியில் அல்லது மணிபர்சில் வைக்கவும்.பணத்தை சேமிக்கும் ஆற்றலை இந்த அதிர்ஷ்ட ரத்தினம் உங்கள் வாழ்க்கையில் செய்து காட்டும்.
$ உங்கள் ஆழ்மனதின் சக்தியைப் பயன்படுத்தி முதலில் உங்கள் திறமை என்ன என்பதைக் கண்டறியுங்கள்.அந்த திறமையைப் பயன்படுத்தி கோடிகள் சம்பாதியுங்கள்.
இந்த சூப்பர் புத்தகம் கிடைக்குக்மிடம்:
யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி
பழைய எண் 11ஈ, புதிய எண் 38 பஜனைக்கோவில் முதல் தெரு,சூளைமேடு,சென்னை-94.
போன்கள்:044-55182568,23614581
செல் எண்கள்:0-98410-40251,9283112897.
விலை:ரூ..60/-
பக்கங்கள்:1668

Wednesday, January 21, 2009

திருக்குறள் ஞான அமுது-ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு


திருக்குறள் ஞான அமுது-தவத்திரு.ரெங்கராஜ தேசிகசுவாமிகள்
திருக்குறளைப் பற்றி இவ்வளவு எளிதாக வேறு எவரும் விளக்கம் அளித்திருப்பார்களா? சந்தேகமே!
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அற்புத வழிகாட்டி.
பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமல் கூறுவது போல பழமொழியைச் சொன்னால் புரியாது.அதை அனுபவித்துப்பார்த்தால் தான் புரியும் என்பது போல் இந்த புத்தகம் ஒரு சிறந்த ஆன்மீகப் பொக்கிஷம்.இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:
*இதயத்தில் தூய்மை இல்லாமல் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் அது பயன் தராது.
*துறவு மேற்கொள்கிறவனுக்கு முன் செய்த நல்வினை இருந்தால்தான் ஞானம் கைகூடும்.
*தினமும் தலைவனை(அகத்தியர் முதலான சித்தர்களில் ஒருவரை) நினைத்து உருகி பூஜை செய்தால் பாவங்கள் சேராது.காமம் அடிபட்டுப் போகும்.கோபம் அடிபட்டுப்போகும்;நான் என்ற கர்வமும் அடிபட்டுப் போகும்.
*காய்கறி உண்பதால் மனதில் சாந்தம் திகழும்.அதே சமயம், எந்த கர்ம வினையும் நம் ஆன்மாவிற்கு வராது.

*அசைவம் உண்பதால் மனதிலும்-உடலிலும் மூர்க்கத்தனம் வளரும்.காம வெறியைத்தூண்டும்.அறிவை(பகுத்தறிவை) மங்கச் செய்யும்.

*ஒருவரது தவம் முற்றுப் பெற 27,000 ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
*தவசிகள்( மாபெரும் துறவிகள்) மனமகிழ்ந்து ஒருமுறை வீட்டில் சாப்பிட்டால் மூன்று புவனத்தார் சாப்பிட்டதற்குச் சமம்.மேலும் 1024 அண்டங்களில்(காலக்சி)உள்ளவர்கள் சாப்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்கும்.
*தாம்பத்திய உறவுக்கு முன் 10 நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திரபாக்கியம் உண்டாகும்.

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சிமாவட்டம்.தமிழ்நாடு.
விலை.ரூ.38/- ஆடியோவாகவும் கிடைக்கிறது.
போன் எண்:04327-255684,255184.
குறிப்பு:இங்கு சுமார் 12 வருடங்களாக அனாதைகள்,வயதான முதியவர்களுக்கு தினமும் அன்னதானம் 3 வேளையும் வழங்கப்பட்டுவருகிறது.சித்தர் வழிபடும் முறை சொல்லித்தரப்படுகிறது.விரும்பும் அன்பர்கள் அன்பளிப்பு(பணம் அல்லது உணவுப் பொருட்கள்) வழங்கலாம்.
நான் ஒருமுறை கூட இங்கு நேரில் சென்றதில்லை.

Monday, January 19, 2009

காமவாழ்க்கையில் நிம்மதிக்கு-ஓஷோவின் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்


வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்-ஓஷோ

செக்ஸ் சாமியார், எல்லா மதங்களையும் அழிக்கப் பிறந்தவர்,ஒழுக்கத்தை உலகமயமாக்குபவர்-என்று ஏராளமான விமரிசனத்திற்கு உள்ளானவர் ஓஷோ என்ற ரஜனீஷ் நமது இந்தியாவில் பிறந்தவர்.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் குச்வாடா என்ற கிராமத்தில் 11-11-1911இல் பிறந்தவர்.
தத்துவத்தில் இவரது சிந்தனை அமெரிக்காவையே 1970-1980களில் ஆட்டிப்படைத்தது.இவரைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டியது
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் என்ற புத்தகத்தைத் தான்!
ஓஷோவின் பேச்சுக்களிலிருந்து சிறு சிறு துளிகளாக இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்த ஒவ்வொரு துளியும் நமது மனதில் நாம்-நமது தனிப்பட்ட உலகம்-நமது காம வாழ்க்கை பற்றி யாதார்த்தமான சிந்தனையை உருவாக்கும்.
எனது வாசிப்பு அனுபவப்படி,
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் திருமணம்தான் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஆனால்,இந்த செல்போன் – இண்டர்நெட் யுகத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காமம்தான் என்பேன்.அந்த காமம்-அதனால் எழும் பிரச்னைகளுக்கு ஓஷொதான் மிக விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
காமத்தில் ஒவ்வொரு ஆணும்-ஒவ்வொரு பெண்ணும் முழு திருப்தி அடையாமல் மற்ற துறைகளில் ஜெயிக்கமுடியாது.இது பற்றி விரைவில் ஆன்மீகக்கடல் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்மில் எழுதுவேன்.

விலை-ரூ.50/-க்குள்.பக்கம் 120க்குள்
வெளியீடு:ஓஷொ பவுண்டேஷன்,தமிழ்நாடு.
இணையமுகவரி:www.oshoworld.com
தமிழக முகவரிகள்:ஓஷொ தர்ம தீர்த்த சன்னியாச ஆஸ்ரமம்,48 & 51 ஜாபர்ஷா தெரு,ஜி.எம்.ஆர்.ஜையின்பவன்,3 ஆம் தளம்,திருச்சி-8.
சேலம்-0427-2281688
கோயம்புத்தூர்-0422-25421,98432-37793,94431-64565.