Friday, January 16, 2009

கர்ம யோகம்-சுவாமி விவேகானந்தர்

கர்ம யோகம்-சுவாமி விவேகானந்தர்-ரூ.25/-

மெக்காலே கல்வித்திட்டம் நமது நாட்டுக்கு அறிமுகமாகி சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த கல்வித்திட்டத்தால் நாம் இன்று உடலால் இந்தியர்களாகவும் சிந்தனை செயலால் ஆங்கிலேயர்களாகவும் இருக்கிறோம்.அதே சமயம் இளைஞர்களாகிய நமது இளைய சமுதாயம் சுய நம்பிக்கையின்றி-திரிகிறது.அல்லது போலியான-பந்தாவான வாழ்க்கை வாழ்கிறது.

நமது சிந்தனை முறை எப்படி இருக்க வேண்டும்? என்பதை சுவாமி விவேகானந்தர் இந்த புத்தகத்தில் சிம்பிளாக விளக்குகிறார்.நமது சொந்த வாழ்க்கையிலேயே நாம் சாதிக்க வேண்டியது பற்றி இவ்வளவு விஸ்தாரமாக வேறு எவரும் விளக்கியதில்லை.
2008-2009 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மட்டும் பிளஸ் டூ முடித்து பெயிலான மாணவர்கள் 10,000 பேர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.சுவாமி விவேகானந்தரை உலகிற்கு அறிமுகப்படுத்திய நமது தரும்மிகு தமிழ்நாட்டில்தான் இந்த இழிநிலை!
இந்த புத்தகத்தைப் படித்தால் தமிழ் இளைஞன் ஒவ்வொருவனும் தன்னம்பிக்கை பெறுவான்.

உதாரணமாக,கடமையைச் செய்;பலனை எதிர்பாரதே! என்பது பகவத்கீதையின் சாரம்சம்.நமது காம்ரெட்கள் இதற்குத்தரும் லூசுத்தனமான விளக்கம் என்ன?
பார்த்தாயா.. வேலையைப் பார்.ஆனால் சம்பளம் கேட்காதே என கிருஷ்ணபரமாத்மா உபதேசிக்கிறார்.
இந்த பகவத்கீதையின் சாரம்சத்தின் உள்ளார்த்தம் என்ன?
ஒரு வேலையை செய்து முடித்ததும் அதற்குரிய பலனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இராதே.அப்படிக்காத்திருப்பதால் அடுத்தடுத்த வேலைகள் தேங்கிவிடும்.எனவே ஒருவேலையை முடித்ததும் அடுத்த வேலையைப் பார்க்கத் துவங்கு.நீ செய்து முடித்த பணிகளுக்கான பலன் நிச்சயம் உன்னைத் தேடிவரும்.

நீங்கள் சிறந்த ஆன்மீகவாதியாக மாறவும்,யாருக்கும்-எதற்கும் – எப்போதும் அஞ்சாமல் உங்களது லட்சியத்தை அடையவும் கர்மயோகம் உதவுகிறது.


எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகத்தின் ஆன்மீக வடிவமே சுவாமி விவேகானந்தரின் கர்ம யோகம்.
இந்த புத்தகம் ஸ்ரீஇராமகிருஷ்ண மடம்,ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் சாலை,மயிலாப்பூர்,சென்னை-4 இல் கிடைக்கிறது.இணையதள முகவரி;www.sriramakrishnamath.org





















.

No comments:

Post a Comment