Thursday, January 22, 2009

முதலிடம் பிடிக்க ஒரு கீதை-சூப்பர் தமிழ் புத்தகம்




நீங்களும் முதல்வராகலாம்-தமிழில் ரா.கி.ரங்கராஜன்
ஆங்கில மூலம்:48 Laws of Power by Robert Green and Juest Elfarse.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள் அல்லது ஒரு நிறுவனமே நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அந்த வேலை அல்லது துறையில் முதலிடம் பிடிப்பது எப்படி?
பிடித்த பிறகு முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வது எப்படி? என்பதை கடந்த 3000 ஆண்டு வரலாறுகளை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியுள்ளனர்.
இன்றைய உலகில் ரேஷன் கடை முதல் இலவசம் வாங்கச் சென்றாலும்.. சுடுகாட்டில் கூட கூட்டம்தான்.குறைந்த காலத்தில் நமது வேலையை முடித்துவிடுவது என்ற வித்தை சிலருக்கே தெரிந்துள்ளது.இதே நிலைதான் நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்..இந்த சூழலில் நாம் நமது வேலை அல்லது துறையில் ஜெயிக்க சில தில்லாலங்கடி வேலை பார்க்க வேண்டியுள்ளது.அதை எப்படி பார்ப்பது என்பதை உதாரணக்கதைகள் மற்றும் சம்பவங்களுடன் விளக்குகிறது.
நான் இந்த புத்தகத்தை இது வரை(22-01-2009) 100 முறை படித்திருப்பேன்.இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.எனது வாழ்க்கையில் சுவாரசியமும் வெற்றிகளும் குவிந்துகொண்டே செல்கிறது.
இந்த புத்தகத்தில் உள்ள டெக்னிக்குகள் தான் கடகராசியில் பிறந்தவர்களுக்கும்,கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிறவி சுபாவமாகவே அமைந்துள்ளது.மற்றராசிக்காரர்களுக்கு இந்த புத்தகமே ஒரு வாழ்க்கை கீதையாக உள்ளது.
இந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்:--

· நீங்கள் முதலிடம் பிடிக்க விரும்பினால்,உள்ளுக்குள் என்ன திட்டம் வைத்திருந்தாலூம், அதை எந்த உயிர் நண்பனிடமும் சொல்லாதீர்.
· அந்த திட்டத்திற்கு பிறரது உழைப்பு,திறமை,அறிவு,அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.இதனால் 2 நன்மை உண்டு.ஒன்று உங்களுடைய அரிய நேரமும் உழைப்பும் மிச்சமாகும்.இரண்டு உங்களது வேகத்தையும்,திறமையையும் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
· எதிரியை வீழ்த்துவதில் முதல் இலக்கு-எதிரியை திசைதிருப்புவதே!
· நீங்களாக பிறரது கோபத்திற்கு ரியாக்ஷன் காட்டாதீர்கள்.
· நண்பன் போல நடியுங்கள்.ஆனால் ஒற்றனாக இருங்கள்.
· வெளியீடு;நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,105,ஜானி ஜான்கான் சாலை,சென்னை-14.விலை ரூ.100/- வெளிநாட்டு வாசகர்களுக்கு $5/-
· இதில் சில ஈவு இரக்கமற்ற நடைமுறைகள் கூறப்பட்டுள்ளன.அவற்றை நாம் பின்பற்றாவிட்டால் எதிரி நம்மை கபளீகரம் செய்துவிடுவான்.

No comments:

Post a Comment